tamilnadu

img

காவலர் வீரவணக்க நாள்: முதல்வர்-டிஜிபி மரியாதை...

சென்னை:
காவலர் வீரவணக்க நாளையொட்டி காவல்துறை தலைவர் அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தில் டிஜிபி திரிபாதி மரியாதை செலுத்தினார்.நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.இதையொட்டி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தின் முன்பு டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் காவல் துறையினர் மரியாதை செலுத்தினர்.

நினைவு கல்வெட்டு
டிஜிபி அலுவலகத்தில் காவலர் நினைவு சின்னம் ஏற்கனவே அமைக் கப்பட்டிருந்தாலும், தமிழக காவல் துறையில் 1962 - முதல் தற்போது வரை பணியின் போது உயிர் தியாகம் செய்த 151 காவலர்களின் உருவம் 
பொறித்த கல்வெட்டுகளை காவல் துறையினர் அமைத்துள்ளனர். இதில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 29 காவலர்களின் கல்வெட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, நடைபெற்ற கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், டிஜிபி அலுவலகத்தில் மகிழம் மரக்கன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நட்டு வைத்தார்.

ஸ்டாலின்
காவலர் நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காவல் துறையில் வீரமரணமடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காவல் துறையில் வீரமரணமடைந் தவர்களுக்குப் பெருமைசேர்க்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.நமது பாதுகாப்புக்காக, அமைதியை நிலைநாட்டிட, குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் சீர்மிகு பணியாற்றி உயிர்நீத்த தியாக சீலர்களான காவல் துறையினர் அனைவருக்கும் வீரவணக்கம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.