tamilnadu

img

கனிமொழி வீட்டிற்கு மீண்டும் காவல்துறை பாதுகாப்பு

சென்னை:
திமுக எம்பி கனிமொழி வீட்டிற் கான போலீஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.திமுக கட்சி உறுப்பினரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி சென்னை சிஐடி காலனியில் வசித்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன்காவல் விசாரணையில் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அவர்கள் இறப்புக்கு காரணமான காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியை சந்தித்து எம்.பி கனிமொழி புகார் அளித்திருந்தார்.இந்நிலையில், சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்பி கனிமொழி வீட்டில் போடப் பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.கனிமொழியின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டாலும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதுகுறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக் கத்தில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவலர்கள் திரும்ப  பெறப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் சாத்தான்குளம் காவலர்கள் மீது கனிமொழி நடவடிக்கை எடுக்க மனு அளித்ததன் விளைவாகவே போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது.இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், கனிமொழியின் வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் விஸ்வநாதன் இதனை உறுதி செய்தார்.

;