tamilnadu

மயிலாடுதுறை சாலையோர வியாபாரிகள் மீது காவல்துறை தாக்குதல்: சிஐடியு கண்டனம்

சென்னை, ஜூன் 23- மயிலாடுதுறை சாலையோர வியாபாரி கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு, தமிழ்நாடு சாலையோர வியா பாரிகள் சங்க (சிஐடியு) ஒருங்கிணைப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு வின் மாநில கன்வீனர் பி.கருப்பையன் விடுத் துள்ள செய்தி வருமாறு: மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகில், வண்டிக்கார தெருவில், கடந்த பல வருடங்களாக சாலையோரத்தில், பூ, பழம், காய்களை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, நகராட்சி சார்பில் இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டு, சாலையோர வியாபாரிகள் என அங்கீ கரிக்கப்பட்டுள்ளனர். இவர்களை உள்ளடக் கிய வெண்டிங் கமிட்டியும் அமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 18 அன்று நக ராட்சி ஆணையர் மற்றும் மயிலாடுதுறை காவல் துறையினர் எவ்வித முன்னறி விப்பும் இன்றி ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் லாரிகளை கொண்டு வந்து கடைகளையும், பொருட்களையும் சேதப்படுத்தியதுடன், சாலையோர வியாபாரிகளையும் கடுமை யாக தாக்கியுள்ளனர். பழக்கூடைகளையும், பூ மற்றும் காய் கறிகளையும் சாலையில் தூக்கி வீசியுள்ளனர். முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், சாலை யோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி வெண்டிங் கமிட்டியில் பேசாமல் இப்படி செய்வது தவறு என கேட்டதற்காக சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.துரைக்கண்ணு, சாலை போக்குவரத்து சங்க மாவட்டத் தலைவர் டி. ரவீந்திரன், சாலையோர வியாபாரிகள் சங் கத்தை சார்ந்த சிவராமன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஜி.ஸ்டாலின், சி.மேகநாதன், டி.கணேசன் ஆகியோரை கடு மையாக தாக்கி, அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  சாலையோர கடைகளை முறைப்படுத்து வது, மாற்றுவது, அப்புறப்படுத்துவது போன்ற சாலையோர வியாபாரிகள் சம் பந்தப்பட்ட எந்தப் பிரச்சனையாக இருந்தா லும், சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி நகர வெண்டிங் கமிட்டியில் முடிவு செய்துதான் அமல்படுத்த வேண்டும். நகர வெண்டிங் கமிட்டிக்கு தலைவராக இருக்கக்கூடிய நகராட்சி ஆணையரே வெண்டிங் கமிட்டியை கூட்டி முடிவெடுக்கா மல், சட்டத்திற்கு விரோதமாக நடந்துள்ளார். சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல் துறை அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு அரா ஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இப்பிரச்சனையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு, சட்டத்தை மீறி அராஜகமாகவும், அநாக ரீகமாகவும் நடந்து கொண்ட நகராட்சி ஆணை யர், மயிலாடுதுறை காவல்துறை ஆய்வாளர் டில்லிபாபு உள்ளிட்ட காவலர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு களை திரும்ப பெற வேண்டும், சாலையோர வியாபாரிகள் அதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளது.

;