tamilnadu

ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 ரிசல்ட்... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...

சென்னை
தமிழகத்தில் கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் கடுமையமான போராட்டத்துக்கு இடையே நடப்பாண்டில் நடைபெற்ற ஒரே பள்ளி பொதுத் தேர்வு பிளஸ் 2 தேர்வு மட்டும் தான். அதன்பின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உட்பட 6 முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து ஆண்டுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது," பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும். கொரோனா வைரஸ் காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். பாடத்திட்டம் குறைக்கும் பணியும் நடைபெறுகிறது. தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும். சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கூறினார். 

;