மத்திய அரசின் இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) சிறந்த ஏற்றுமதி மற்றும் பொறியியல் நிறுவனங்களுக்கு பிளாட்டினம் விருதுகளை வழங்கியது. இதனை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி வழங்கினார். ஃபியட் இந்தியா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் உள்பட பல நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் தரத்தில் சிறப்புத்தன்மைக்கான உச்சபட்ச விருது இஇபிசி விருது என்பது குறிப்பிடத்தக்கது.