tamilnadu

பெட்ரோல், டீசல் கார்கள் மின்சார வாகனங்களாக மாற்றம்

சென்னை, ஏப்.17-பெட்ரோல், டீசல்கார்களை 36 மணிநேரத்திற்குள் மறு சீரமைப்பு செய்து மின்சார வாகனமாக மாற்றும் தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ளஇ-டிரியோ ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம்இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. பெட்ரோல் டீசல் விலைஉயர்வால் அவதிப்படும்வாகன உரிமையாளர்களுக்கு “நல்லதொரு எதிர்காலம் அமைப்போம்’’ என்ற அழைப்புடன் இந்த சேவையை அந் நிறுவனம் செய்ய முன்வந்துள்ளது. இதற்கான மறு சீரமைப்பு செய்யும் முதல் இந்திய நிறுவனத்திற்கான சான்றிதழையும் அது பெற்றுள்ளது.பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 50 கார்களை மறுசீரமைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றி தெலங்கான வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது.ஒருமுறை சார்ஜ் செய்தால் 150கி.மீ வரை பயனிக்கலாம். பேட்டரி பாதுகாப்பு மற்றும் தரத்தினை கருத்தில் கொண்டு இதுவே சொந்தமாக தயாரிக்கிறது. இந்த சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த பிரான்சைஸ் பெறவிரும்புவோரை இந்நிறுவனம் வரவேற்பதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

;