tamilnadu

img

பந்தலூர் கோவில் முறைகேடு வழக்கு: இன்று விசாரணை

சென்னை:
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கக்கோரிய மனுவுக்கு அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், பந்தநல்லூரைச் சேர்ந்த வெங்கடராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பந்தநல்லூரில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான பசுபதீஸ்வரர் கோயிலில் உள்ள பழங்கால சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன.கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. இந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்கு வரவேண்டிய வருமானம் 24 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் வருமானத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், ஏற்கனவே கோயில்கள் சொத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் திங்களன்று (ஆக.17) விசாரணைக்கு வருவதால், அந்த வழக்குகளுடன் இந்த வழக் கும் விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.

;