tamilnadu

சென்னையில் 81 ஒழுங்குபடுத்தும் குழுக்கள் அமைப்பு

சென்னை, ஜூலை 11 - சென்னையில் மார்க்கெட் பகுதிகளில் பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்றுவதை உறுதிபடுத்த 81 ஒழுங்கு படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள காய்கனி,  மளிகைக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளில்  கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் கடைபிடிப்பதை கண்காணிக்க கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் 81  சந்தை ஒழுங்குப்படுத்தும் குழுக்களும், வட்டாட்சியர்கள் தலை மையில் 32 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப் பட்டுள்ளது. சந்தை ஒழுங்குபடுத்தும் குழு, சந்தைகளில் சமூக இடை வெளி கடைபிடித்தல், கடை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வருதலை கண்காணித்தல், கடைகளில் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்கப்  பட்டுள்ளதை உறுதி செய்தல் பணியை மேற்கொள்ளும். இவற்றை மேற்பார்வையிட வட்டாட்சியர்கள் தலைமை யில் 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் வட்டாட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை  வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். இந்த கண்காணிப்பு குழு, விதிமீறலில்  ஈடுபடும் மார்க்கெட் / கடைகளை அபராதத்துடன் 14 நாட்க ளுக்கு மூடி சீல்வைக்கும். மேலும், மார்க்கெட் பகுதிகளி லும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அருகில்  உள்ள காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

;