மலைவாழ் மக்கள் சங்க தலையீட்டால் பட்டா வழங்க உத்தரவு
ருவள்ளூர், ஜூன் 18- கூட்டுக்குடும்பத்தில் இட நெருக்கடி யால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என நீண்டகால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. திருவள்ளூர் அருகிலுள்ள மப்பேடு கிராமத்தில் வாழும் இருளர் இனத்தவர்கள் ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதி வந்த னர். படுத்து உறங்க கூட இடமில்லாத சூழ்நிலை நிலவி வந்தது. மழை காலத்தில் குடிசையில் நிற்க கூட இடமில்லை. அந்த அளவிற்கு இட நெருக்கடி ஏற்பட்டது. இந்த இட நெருக்கடியை போக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சிறு பந்தியூர் ஊராட்சியில் மாற்று இடம் 11 குடும்பங்களுக்கு தற்காலிக பட்டா செவ்வாயன்று (ஜூன் 17), வழங்கப்பட்டது. மேலும் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின்கீழ் தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணைக்கான உத்தரவும் வழங்கப் பட்டுள்ளது. கோரிக்கைகள் சிறுபந்தியூரில் கொடுத்துள்ள மாற்று இடத்தை அளவீடு செய்து கல்நட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும், தனி சுடுகாடு, குடிநீர், மின்விளக்கு போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும், கணினி பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தினர். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இ.கங்காதுரை, மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சண்முகம், மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், முன்னாள் மாவட்ட செய லாளர் ப.சுந்தரராசன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட துணை நிர்வாகிகள் பி.அற்புதம், எம்.சின்னராசு, எஸ்.தேவி, அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.