tamilnadu

img

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... நாடு முழுவதும் விவசாயிகள் ஆவேச போராட்டம்... தமிழகத்தில் 300 மையங்களில் மறியல்...

சென்னை:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் விளை பொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020ஆகிய 3 சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணை ப்புக்குழு சார்பில் செப்டம்பர் 25 வெள்ளியன்று  நாடு முழுவதும் ரயில்  மறியல், சாலை மறியல் போராட்டங் கள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை, செங்குன்றம் அடுத்த சோழவரம் சுங்கச்சாவடி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

770 அமைப்புகள் போராட்டம்

இதுகுறித்து பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயத்தையும், விவசாயி களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் உணவு பாதுகாப்பு திருத்தச் சட்டம், கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கும் வகையில் விவசாய பொருட்கள் வியாபாரம் மற்றும்வர்த்தக திருத்தச் சட்டம், விவசாயி களை கார்ப்பரேட்டுகளிடம் அடிமையாக்கும் ஒப்பந்த விவசாய சட்டம் ஆகிய 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் 770அமைப்புகளைக் கொண்ட ஒருங் கிணைப்புக் குழு சார்பில் தினசரி ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகளுக்கு  பாதுகாப்பு இல்லை
தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றசாலை மறியல் போராட்டம் 300-க்கும்மேற்பட்ட மையங்களில் நடைபெற்றுள்ளன. மத்திய அரசு இந்திய விவசாயத்தை, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகுவைக்கக்கூடிய வகையில் விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்த சட்டங்களில் விவசாயிகளை, விவசாயத்தை பாதுகாப்பதற்கான எந்த அம்சமும் இடம்பெறவில்லை.

தமிழக முதல்வரின் சரணாகதி
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துகளை விவசாயிகள் நிராகரிக்கிறோம். அவருடைய கருத்துகளை புறக்கணிக்கிறோம். அவர் தெரிவித்துள்ள கருத்துகளில் சிறிதளவு கூட நியாயம் இல்லை. தங்கள் அரசியல் நலன்கருதி அவர் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையை விவசாயிகளின் நலன் கருதி முதல்வர் திரும்பப் பெற வேண்டும். இந்தியாவில் எந்த ஒரு மாநில முதலமைச்சரும் தமிழக முதலமைச்சரை போல் இந்த சட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிடவில்லை.

அதிமுகவில் முரண்பாடு
அதிமுக தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மாநிலங்களவையில் பேசியதுதான் புதிய சட்டத்திலே இருக்கின்ற அம்சங்கள். அரசியல் சுய லாபத்திற்காக தன்னுடைய பதவியை பாதுகாத்துக்கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி, உண்மைக்கு மாறான தகவல்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். எனவே முதலமைச்சர் பதவிவிலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இப்போராட்டத்தில்  அகிலஇந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழகஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன்,  விவசாயிகள் சங்கமாவட்டத்தலைவர்  ஜி.சம்பத், சிஐடியுமாவட்டத்தலைவர் கே.விஜயன்,விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி.வி.எல்லையன், பி.கதிர்வேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.கோதண்டன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் டி.மதன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் பத்மா,மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வசந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், ஒன்றியக் கவுன்சிலர் பெ.ரவி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.வி.முனுசாமி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக சோழவரம் மேம்பாலம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு சுங்கச்சாவடி நோக்கி பேரணியாகச் சென்று அங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சோழவரம் காவல் துறையினர் கைது செய்தனர்.'

;