tamilnadu

img

50 சதவீத இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும்... இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது

சென்னை:
 மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக, திமுக,சிபிஎம் சிபிஐ உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  இந்திய மருத்துவ கவுன்சில் இவ்வழக்கு தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

அதில்,  மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.  இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.எனவே உச்சநீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்யமுடியாது என்று பதில் அளித்துள்ளது.

;