tamilnadu

img

கொரோனா நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 25 - கொரோனா நிவாரண நிதிக்கு அரசு ஊழி யர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (டி.என்.ஜி.இஏ) அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச்  செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவின் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் விமான சேவை களும், ரயில் சேவைகளும், பேருந்து சேவை களும் 21 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு சுய ஊரடங்குகளும், 144 தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. திடீர் ஊரடங்குகளும், 144 தடைச் சட்டங்களும் தவிர்க்க இயலாத தாக மாறிவிட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களை விற்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், அலு வலகங்கள், துறைகள் அனைத்தும் 24ந் தேதி  நள்ளிரவு முதல் முடக்கப்படும் என்று அறி வித்துள்ளது. இதனால் வீடற்றவர்களும், அன்றாடங் காய்ச்சிகளும், தினக்கூலித் தொழி லாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர்க ளும் வாழ்வாதாரங்கள் இன்றி உடனடி பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடிய நிலை எழுந்துள்ளதை உணர்ந்து அரசாங்கம் அவர்க ளுக்குத் தேவையான உணவு மற்றும் தங்கு மிட வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கான அனைத்து உத்தரவாதங்களையும் ஏற்பாடு களையும் உடனடியாக மேற்கொள்ள தமிழ்  நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கி றது.  அதேவேளையில், தமிழக அரசுத் துறை களில் பணிபுரியும் அத்தியாவசியத் துறை  தவிர்த்த பெரும்பாலான துறை ஊழியர்க ளுக்கு 21 நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், அரசாங்க ஊதியம் பெறும் இதர பணிப்பிரிவினரும் கொரோனாவிற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு முழு  ஒத்துழைப்பு நல்க முன்வரவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. கொரோனா வைரஸ் மேலும் மேலும் பரவாமல் தடுக்க அரசாங்கம் சொல்லும் வழி முறைகளை நாமும், நம்மை சுற்றி இருப்ப வர்களையும் கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். வீட்டை விட்டு வெளியில் வராமல்,  கும்பல் கூடாமல் சில நாட்கள் தனித்து இருக்க  அறிவுறுத்த வேண்டும்.  அடிப்படை தேவைகளுக்கான பொருட்  களை வாங்குவதற்காக வெளியே வருவ தைத் தவிர சில நாட்களுக்கு சுய கட்டுப் பாட்டுடன் தனித்திருக்க நம்மையறிந்த அனைத்து மனிதர்களுக்கும் அலைபேசி மூல மாகவும், குறுஞ்செய்திகள் வாயிலாகவும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், அரசு ஊழியர்கள் என்ப வர்கள் சம்பளத்திற்காக வேலை செய்யும்  ஊழியர்கள் என்று இல்லாமல், சமூக அக்கறை யும், பொறுப்புணர்வும், இக்கட்டான சூழ் நிலைகளில் அரசுடன் ஒன்றிணைந்து நிற்கும்  தன்மை கொண்டவர்கள் என்பதை சமூ கத்திற்கு எப்போதும் உணர்த்தி வருகி றோம். அந்த உணர்வோடு, அரசு ஊழியர்கள்  நாம் அனைவரும் நம்முடைய ஒருநாள் ஊதி யத்தை கோவிட்-19 நோய்த் தடுப்பு நிவாரண  நிதிக்காக வழங்கி நலிந்த மக்களின் மனதில்  நம்பிக்கை விதைப்போம்.  கோவிட்-19 எனப்படும் கொரோனோ வைரஸ் தொற்றையும் கரத்தால் தனித்து நின்றும், கருத்தால் ஒன்றிணைந்தும் இவ்வு லகை விட்டு விரட்டியடிப்போம் என கேட்டுக்  கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;