,நவ.5- நெல்லையில் மாணவர்களைத் தாக்கிய நீட் பயிற்சி மையம் மீது மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக எடுத்த நட வடிக்கை என்ன? என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநக ராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெல்லை, புதிய பேருந்து நிலை யம் அருகே கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் ஜல் நீட் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையத்தில் வார்டனாக பணி புரிந்த அமீர் உசேன் என்பவர் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று பயிற்சி மையத்தில் உள்ள மாணவர் களை அடித்து கொடுமைப்படுத்தப் படுவதாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அதற்கான வீடியோ ஆதாரங் களையும் சமர்ப்பித்தார்.
நீட் பயிற்சி மைய உரிமையாளர் மாணவர்களை பிரம்பால் தாக்கி விரட்டுவதும், மாணவி ஒருவர் மீது செருப்பை தூக்கி வீசி எறியும் வீடியோ காட்சிகளும் சமூக வலை தளங்களில் வைரலானது. இச்சம் பவம் மனித உரிமை ஆணைய மனுக் கள் குறித்த விசாரணைக்காக நெல்லையில் முகாமிட்டிருந்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கவனத்திற்கு வந்தது இதையடுத்து கடந்த மாதம் 18 ஆம் தேதி நீட் பயிற்சி மையத்திற்கு நேரடி யாக சென்று, அங்கு மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக மேலப்பாளையம் காவல்துறையினர் நீட் பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலை யில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப் பட்டது தொடர்பாக எடுத்த நட வடிக்கை குறித்து விளக்கம் கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாநகர காவல் ஆணை யர், நெல்லை மாநகராட்சி ஆணை யர் ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
நீட் பயிற்சி மையத்தில் விடுதி செயல்பட்டு வந்துள்ளது. அதற்கு அனுமதி பெறப்பட்டதா?, அங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினரா? என்பதன் அடிப்படை யில் இந்த வழக்கில் மாநகராட்சி ஆணையரும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.