tamilnadu

img

யானை வழித்தடத்தில் ஈஷா யோகா மையமா? அமைச்சர் விளக்கம்

சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டப்பேர வையில் வனத்துறை மீதான மாநில கோரிக்கை மீது நடந்த  விவாதங்களுக்கு அமைச்சர்  மதிவேந்தன் பதில் அளித்து பேசினார். 

அப்போது, “யானை வழித் தடங்கள் என்றால், யானை வாழ்விடங்களை இணைப்பதற்காக யானை களால் தொடர்ந்து பயன் படுத்தப்படும் தடங்கள் என்று  குறிப்பிடலாம். யானை நட மாட்டம் உள்ள மாவட்டம்  வாரியாக அந்தந்த பகுதிக் கான யானை வழித்தடங்கள் குறித்த விவரங்களை, மக்  கள் கருத்து கேட்புக் கூட்டத்  தில் விளக்கி மக்களின் கருத்  துக்கள் தொகுக்கப்படும். அதன் அடிப்படையில் இறுதி  அறிக்கை சிறப்பு குழுவால் முடிவு செய்யப்படும்” என் றார்.

அப்போது குறுக்கிட்ட, காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா, ஒழுங்குப் பிரச் சனை ஒன்றை எழுப்பினார். “யானை வழித்தடங்களை அழித்து கட்டடங்கள் கட்  டப்படுகின்றன. சாலையை  யானைகள் கடக்கும் பகுதி களில், யானை கடக்கும் பகுதி என்ற பலகைகளை வைப்பதில்லை. கோவை யில் ஈஷா யோகா மையத்தை யானை வழித்தடங்களை மறித்து கட்டியுள்ளனர்” என்றார்.

;