tamilnadu

காலமானார்

 சென்னை, நவ. 14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷேர் ஆட்டோ கிளை உறுப்பினர் தயாளனின் தாத்தா நாராயணசாமி (வயது 104), பாட்டி மகாலட்சுமி (வயது 96) ஆகியோர் புதனன்று (நவ.14) நள்ளிரவு இயற்கை எய்தினர். கண்ணகிநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர் ரபீக், சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பா.அன்பழகன், சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களது உடல் வியாழனன்று (நவ.14) கண்ணகிநகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.