tamilnadu

img

வேட்பு மனு...

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். தட்சிணாமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் கண்ணன் உடனிருந்தார்.

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றியச் செயலாளர் லோகநாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் 17 வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த க.விஜயலட்சுமி பரங்கிப்பேட்டை வட்டார  வளர்ச்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். கிளைச் செயலாளர் எஸ்.குணசேகரன், கலைமணி, அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ம. அஞ்சம்மாள் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு தாக்கல்  செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு,  ஒன்றியக்குழு உறுப்பினர் மணி ஆகியோர் உள்ளனர்.

;