“சடங்குகளும் தீயைச் சுற்றி நடப்பதும் இந்து திருமணத்துக்குக் கட்டாயமாக்கப்பட்டது. 1967-இல், அண்ணா தலைமையிலான திமுக அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. மனமொப்பிய எந்த இரு இந்துக்களும் மாலை மாற்றியோ மோதிரம் அணிவித்தோ தாலி கட்டியோ மணம் முடிக்கும் வாய்ப்பு உருவானது. அதன்படி தமிழ்நாட்டில் நடைபெற்ற திருமணங்களுக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொருந்தாது. தமிழ்நாட்டின் திருமணங்களை எந்த சடங்கும் தீர்மானிக்க முடியாது; எந்தத் தீயும் தடுக்கவும் முடியாது!” என்று உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.