tamilnadu

என்ஐடி முன்னாள் மாணவர்கள் ரூ.21 கோடி நிதி நன்கொடை

சென்னை, ஜன.5- இந்தியாவில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், என்.ஐ.டி., எனப்படும், நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னா லஜி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை, கிழக்கு கடற்கரை சாலை யில் நடந்தது. தேசிய பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: திருச்சி என்.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர்கள் சார்பில், பிரமாண்ட விளை யாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளதை நான் வரவேற்கி றேன். நான் பேட்மின்டன் விளையாட துவங்கும் போது, இத்துறையில் சிறந்து விளங்குவேன் என நினைக்கவில்லை.  பெற்றோரின் ஊக்கம், எனக்கு அமைந்த சிறந்த பயிற்சியாளர்கள் மூலம், பேட்மின்டனில் வளர்ச்சி பெற்றேன்.கடந்த, 1990ல் இருந்து 2002ஆம் ஆண்டு வரை, பல மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். இதனால், எனது ஆட்டத் தில், ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டன. இருப்பினும், மனம் தளராமல் விளையாடி னேன். அதற்கு உரிய பலனை பெற்றேன்.ஆந்திர அரசு எனக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தது. அதன்பின், அகாடமி அமைத்து, திறமை உள்ளோரை அடையாளம் கண்டு, பயிற்சி அளித்து வருகிறேன்.நம் வளர்ச்சிக்கு குரு தான் காரணம் என்பதை மறக்கக் கூடாது. அவர்க ளுக்கு, எப்போதும் மரி யாதை அளித்து, கவுர வப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், சென்னை, என்.ஐ.டி., தலை வர் ஜேம்ஸ் வால்டர்,திருச்சி, என்.ஐ.டி., இயக்குனர் மினி தாமஸ், முன்னாள் மாண வர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ண சாய் உள்ளிட் டோர் பங்கேற்று பேசினர்.கடந்த, 1969ஆம் ஆண்டு முதல், 2019 வரை படித்து வெளியேறிய முன்னாள் மாணவ - மாணவியர், 1,800 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்கள் அனுப வங்களை பேசி மகிழ்ந்தனர். முன்னாள் மாணவர்கள் சங்கத்தலைவர் கிருஷ்ண சாய் பேசுகையில், திருச்சி, என்.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் ரூ.20கோடியை நன்கொடையாக திரட்டி கல்லூரிக்கு அளித்துள்ளனர் என்றார். எங்கள் கல்வி நிறுவன வளாகத்திலேயே, முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன், 'ஸ்டேடியம்' அமைக்க முடிவு செய்துள் ளோம். இதில், 6,500 பேர் அமர்ந்து பார்க்கும் வசதியு டன் கட்டப்பட உள்ளது. இத்திட்டம், 6.50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்  தப்பட உள்ளது. இதற்கான நிதி முழுக்க முழுக்க முன்னாள் மாணவர்கள் வழங்குகின்றனர் என்றும் அவர் கூறினார்.  கல்லூரியின் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு பணி களுக்காக முன்னாள் மாண வர்கள் ரூ.21.5 கோடி வரை நிதி வழங்க முன்வந்துள்ள னர் என்றும் அவர் தெரிவித்தார்.

;