தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சியார்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (36), தனது மனைவி சசிகலா இறந்த துக்கம் தாங்காமல் திங்கட்கிழமை (ஆக. 10) இரவு கன்னடிகுப்பம் பகுதியில் பெங்களூர் - சென்னை செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜோலார் பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் முன் குழந்தை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் முன்பு பிறந்து 1 மாதமே ஆன ஆண் குழந்தையை மர்மநபர்கள் வீசிச்சென்றுள்ளனர். வாலாஜாப்பேட்டை காவல் துறையினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு மையத்தில் பால் வாங்காததைக் கண்டித்து திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே 7 கிராம மக்கள் கடலூர் - சித்தூர் சாலையில் ஆயிரம் லிட்டர் பாலை தரையில் ஊற்றி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அணை திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக புன்செய் பாசனத்திற்கு புதன்கிழமை (ஆக. 12) முதல் 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரு பிரதானக் கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.