புதுச்சேரி தொற்று 14,441
புதுச்சேரியில் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,441ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக உயர்ந்துள்ளது.
ஆய்வு
கடலூர் மாவட்டம் அண்ணாமலைநகர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் 144 படுக்கைகளுடன் மேலும் ஒரு கொரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணியை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.
வழக்குப் பதிவு
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக தண்டலை கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (23) உட்பட 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனைவிதை
வாணியம்பாடி வனப்பகுதியில் 10 ஆயிரம் பனைவிதை விதைக்கும் பணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.
தடை
திருவண்ணாமலையில் தொடர்ந்து 6ஆவது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு இல்லை என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.