tamilnadu

செய்தித் துளிகள்

2 பேருக்கு குண்டாஸ்

வேலூர் மாவட்டம் திருவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய சதீஷ் (22), சூர்யா (24) ஆகிய இருவரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் குண்டர்  சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கிணற்றில் விழுந்த மான்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை கிராமத்தில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் மானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு அம்மூர் காப்புக்காடு பகுதிக்குள் சென்று பத்திரமாக விட்டனர்.

யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உரிகம் வனக் கோட்டத்தில் பிலிக்கல் என்ற வனப்பகுதியில் 20 வயது பெண் யானை உயிர் இழந்தது. வனத்துறையினர் பிரேதப் பரிசோதனை செய்து சம்பவ இடத்திலேயே குழி தோண்டி யானையை புதைத்தனர்.

கடலூர்: சிகிச்சையில் 21 பேர்

கடலூரில் செம்மண்டலம் பகுதியில் தனியார் மருத்துவ மனையில் பணிபுரியும் பெண் லேப் டெக்னிஷியன் ஊழிய ருக்கும், என்.எல்.சி ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூர்  மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் பெறுவோரின் எண்ணிக்கை செவ்வாயன்று (மே 26) 21 ஆக உயர்ந்துள்ளது. ’

துணிக்கடைகள் மூடல்

வேலூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட ஏதுவாக இரண்டு நாட்கள் மட்டும் துணிக்கடைகளை திறந்து தனிமனித இடைவெளியுடன் விற்பனை செய்துகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து கடந்த 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் துணிக்கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் அனைத்து துணிக் கடைகளும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன.

5 லட்சம் கொள்ளை

ஆம்பூர் அருகே சம்பூர்ணம் என்ற மூதாட்டியை திசை திருப்பி 5 லட்ச ரூபாய் மற்றும் 17 சவரன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உமாராபாத் காவல் துறை யினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

தி.மலையில் 238ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாயன்று (மே 26) மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளதால், நோயாளிகளின் எண்ணிக்கை, 238 ஆக உயர்ந்துள்ளது.