tamilnadu

செய்தித் துளிகள்

குடும்ப வன்முறை: 616 புகார்

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் பெற்றப்பட்டுள்ளது.

சென்னையில் 108 டிகிரி வெயில்

ஆம்பன்புயல் தாக்கம் காரணாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்க ளில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரண்ஹீட்டை தாண்டியது.  சென்னை யில் 108 டிகிரியும், திருத்தனி, வேலுரில் 106 டிகிரியும் பதிவாகி உள்ளது.

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

சென்னையை அடுத்த கீழ்கட்டளை துணைமின் நிலைய ஊழியர்  சாமிநாதன் (வயது 40) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு: 58 பேருக்கு தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நாளில் 58 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும்  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ள னர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 560 லிருந்து 621ஆக உயர்ந்துள்ளது. 423 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வருவாய் அலுவலர் மரணம்

காஞ்சிபுரம் நகராட்சியில் வருவாய் அலுவலராக பணியாற்றி வரு கின்ற தமிழ்செல்வி அலுவலகம் சென்று கொண்டிருந்தபோது சில நாட்க ளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனாவுக்கு 5 பேர் பலி

கொரோனா தொற்றால் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த 44 வயது பெண், சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த 52 வயது  ஆண், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி, 47 வயது ஆண், திருவொற்றியூரை சேர்ந்த 71 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மேலும் 45 பேருக்கு கொரோனா

சென்னை ராயபுரம் பகுதிக்குட்பட்ட காக்கா தோப்பு தெருவில் 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் ஆயிரத்து 423  பேர் பாதக்கப்பட்டுள்ளனர். தற்போது கண்டறிந்தவர்களையும் சேர்த்து  அந்த மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 468ஆக உயர்ந்துள்ளது.

வெளிமாநிலம்: 81 பேருக்கு தொற்று

மகாராஷ்ட்ராவில் இருந்து வந்த 80 பேருக்கும், டெல்லியில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று பரிசோதனையில் உறுதி

காஞ்சிபுரம்: 14 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, படப்பை, நந்தம்பாக்கம், பாலு செட்டி சத்திரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்  பட்டது. மாவட்ட அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 223 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா விரட்டும் திட்டம்

நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார். இதன்படி, அதிக பாதிப்புள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று தெர்மல் மீட்டர் மூலம் பொதுமக்களின் உடல் வெப்பம்  சோதனை செய்யப்படும். முதற்கட்டமாக சென்னையில் அதிக பாதிப்புள்ள  ராயபுரத்தில் சோதனையை அமைச்சர் தொடங்கி வைத்தார்

9,605 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 4 லட்சத்து 70 ஆயிரத்து 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 லட்சத்து 98 ஆயிரத்து 701 பேர் கைது செய்யப்பட்டு சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த  24 மணி நேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 605 வழக்குகள் பதிவு செய்யப்  பட்டு 5 ஆயிரத்து 720 பேர் கைது   செய்யப்பட்டு சொந்த பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 7 ஆயிரத்து 118 வாகனங்கள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 341 வாக னங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், அபராதமாக 6.54 கோடி  ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

4 பேர் குணமடைந்தனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 43 பேர் சிகிச்சை பெற்று வந்த னர். ஏற்கனவே குணமடைந்து 39 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். இந்நிலையில் மீதமுள்ள சிறுமி உள்ளிட்ட 4 பேரும் பூரண குணம் அடைந்தனர். அவர்களை மருத்துவர்களும், செவிலியர்களும் கைதட்டி ஆரவாரத்துடன் வாழ்த்தி வழி அனுப்பினர். 

தினசரி 600 ஆட்டோக்கள் பறிமுதல்

சென்னையில் ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் ஆட்டோ, கால்டாக்சி போன்ற வாகனங்களை இயக்க அரசு அனுமதி அளிக்க வில்லை. இருப்பினும் ஊரடங்கு தளர்வை பயன்படுத்தி அதிகளவு  சென்னையில் ஆட்டோக்கள் இயங்கின. இதனையடுத்து ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்ட னர். அதன்படி கடந்த 11 நாளில் சுமார் 6500 ஆட்டோக்களை பறிமுதல்  செய்துள்ளனர். அபராதமாக ஒரு ஆட்டோவிற்கு 500 ரூபாள் விதிக்கப்படுகிறது. இதன்படி தினசரி சராசரியாக 600 ஆட்டோகள் நாளொன்றுக்கு பறிமுதல் செய்யப்படுகிறது.