திருவண்ணாமலை தொற்று 567
திருவண்ணாமலையில் வியாழகிழமை 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 567ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் தொற்று 513ஆக உயர்வு
கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 513 ஆக உயர்ந்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பேரூராட்சி சார்பில் சுற்று சூழல் பாதுகாக்கும் விதமாக சபாபதி நகர், அப்பங்கார குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
விபத்தை தடுக்க...
திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள புறவழிச்சாலை தொடங்கும் இடத்தில் பெரிய அளவிலான வளைவு உள்ளது. அங்கு அடிக்கடி நடைபெறும் வாகன விபத்துகளை தடுப்பது குறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட உதவி கோட்ட பொறியாளர் ஸ்டெல்லா, உதவி பொறியாளர் பூபதி ஆகியோருடன், திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ், உதவி ஆய்வாளர் சிவசந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் புறவழிச்சாலை தொடங்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
குண்டாஸ்
ராணிப்பேட்டையில் கடந்த மே மாதம் நடந்த வாலிபர் கொலை வழக்கில் அதே பகுதியைச் வருண்ராஜ் (26), வக்கீல் தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (23) இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காளிப்பாளர், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின் பேரில் வருண்ராஜ், ராஜசேகர் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.