tamilnadu

img

புதுவையில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

புதுச்சேரி,மே 22- புதுச்சேரி அரசைக் கண்டித்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங் களை முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றி யுள்ளதைக் கண்டித்தும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக 3 மாதத்திற்கு உயர்த்தி அறி வித்துள்ள அரசின் ஆணையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை கட லூர் சாலையில் உள்ள ஜுலை 30 தியாகி கள் சிலை அருகில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அனைத்து மத்திய  தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பா ளர் அபிஷேகம் தலைமை தாங்கினார். சிஐ டியு பிரதேச தலைவர் கே.முருகன் போராட்  டத்தை துவக்கிவைத்து பேசினார். செய லாளர் சீனுவாசன், ஏஐடியூசி பொதுச்செய லாளர் சேதுசெல்வம், அனைத்து சங்க தலை வர்கள் ஞானசேகரன், முத்துராமன், மோகன்  தாஸ், ஞானபிரகாசம், பாப்புசாமி, பழனி வேல், மோதிலால், செந்தில், சிவப்பிரகாசம், தமிழ்செல்வன், பிரேமதாசன், ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் காவல்துறை யினர் கைது செய்தனர்.