tamilnadu

img

புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர்

சென்னை,பிப்.7- தமிழ்நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் மிக விரைவாக தொடங்கும் என்ற  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய  கருப்பன் தெரிவித்தார்.

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:-

கூட்டுறவுத்துறை தனக்கென்று சில திட்டங்களை வகுத்து, அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அலுவலர்களுக்கு வழிகாட்டு நெறி முறைகள் உருவாக்கி அதன்படி  செயல்படுத்தப்பட்டு வருகிறது.  வருகின்ற 12ஆம் தேதி சட்டமன்ற  கூட்டத்தொடர் நடைபெறவுள்ள தால், கடந்த காலத்தில் அறிவிக்கப் பட்ட அறிவிப்புகள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், புதிய அறிவிப்புகள் என்ன அறிவிக் கலாம் என்பது பற்றியும் கலந்தாலோ சிக்கும் கூட்டத்தை நடத்தினோம்.

அரசு வழங்குகின்ற குடிமைப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு முறையாக கொண்டு சென்று சேர்ப்பது மட்டுமல்லாமல், நெருக் கடி காலங்களில் கூட்டுறவுத்துறை முதலமைச்சர் உத்தரவுப்படி அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து கொடுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.