tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை குலக்கல்வியாக மாறும் ஆபத்து...

கோத்தாரி மிகச் சிறந்த கல்வியாளர். அவருடன் குழுவில் இருந்தவர்களும் நாடறிந்த கல்வியாளர்கள். சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். கஸ்தூரிரங்கன் குழுவை விமர்சிக்க விரும்பவில்லை.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 12 ஆண்டுப் பள்ளிக் கல்வி சிறப்புற நடைபெற்று வருகின்றது. சிறு கிராமத்திலுள்ளவர்க்கும் உயர்கல்வி செல்ல வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப்பொழுது அதனை 11 ஆண்டாகக் குறைப்பது பிற்போக்கான செயல். பட்டப்படிப்பு 4 ஆண்டுகளுக்குக் குறையாது இருக்குமாதலால் கல்விச் செலவு அதிகரிக்கும். 12-ஆம் வகுப்பு வரை இலவசக்கல்வி பெற்று வரும் மாணவர்க்கு கூடுதல் செலவாகும். பட்டப்படிப்பும் கல்வி மறுப்பிற்கு உதவும்.6- ஆம் வகுப்பிலிருந்து ஒரு கைத்தொழில் பழக வேண்டும் என்பதிலே கருத்து வேறுபாடில்லை.அதனைப் பள்ளியில் உறுதி செய்யாது ஒரு தொழிலகத்தில் பயிற்சியாளராகக் கற்க வேண்டும் என்று கூறியிருப்பதே இராஜாஜியின் குலக் கல்வித் திட்டமாகவே சிற்றூர்களில் மாறிவிடும். கிராமங்களில் தொழில் பயில வாய்ப்புகள் குறைவாதலால் பெற்றோரிடமே தொழில் கற்க வேண்டியிருக்கும். அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஆபத்து உள்ளது.2010 ஏப்ரல் 1ஆம் நாள் கல்வி உரிமைச் சட்டம் செயல்படுத்தப்பட்டும் அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேரவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அனைவர்க்கும் கட்டாயக் கல்வியா, விருப்பமுள்ளவர்க்கு மட்டும் கல்வியா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

===எஸ்.எஸ்.இராசகோபாலன்====

கல்வியாளர்

;