tamilnadu

img

எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ. டப்பிங் யூனியன் செயற்குழுவில் இன்று தீர்மானம்.

பிரபல திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். பாடகராக மட்டுமன்றி பல படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் எஸ்பிபி பணிபுரிந்துள்ளார். மேலும் டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ கட்டப்படும் என்று டப்பிங் யூனியன் செயற்குழுவில் நடிகர் ராதாரவி இன்று தீர்மானம் இயற்றியுள்ளார்.