tamilnadu

img

அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பு

சென்னை:
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை செப்டம்பருக்கு ஒத்திவைத்து மத்திய அரசு அறிவித்துள் ளதை அடுத்து தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜூலை 26-ஆம் தேதி நடைபெற இருந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதையடுத்து, நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர் களுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது நீட் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு e-box என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆன்-லைன் வழியில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இந்த மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெற இருந்த பயிற்சி வகுப்புகள் , ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

;