tamilnadu

நீட் தேர்வு அமர்க்களம்: மாணவிகளுக்கு சோதனை மேல் சோதனை....

சென்னை:
தமிழ்நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மாணவர்கள் ஞாயிறன்று (செப். 12) எழுதினர்.நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் கள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி, ஞாயிறன்று தேர்வு நடந்தது. அப்படி நடந்த தேர் வில் கடும் கெடுபிடிகள் கடைபிடிக்கப் பட்டன.சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காஞ்சிபுரம், வேலூர், செங் கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஞாயிறன்று காலை முதலே பெற் றோருடன் மாணவர்கள் தேர்வு மையத்தின் முன்பு காத்திருந்தனர்.

வெகுநேர காத்திருப்புக்குப் பின், காலை 11 மணி முதல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களை 2 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொருவராக வரவழைத்து விண்ணப்பங்களை ஆய்வு செய்தனர். பின்னர் உடல் முழுவதும் பரிசோதனை செய்து அவர்கள் தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதற்கிடையில் ‘மாணவர்களை சோதனைக்கு உட்படுத்துகிறோம்’ என்ற பெயரில் தலை முதல் கால் வரை மெட்டல் டிடெக்டர் வைத்து அதிகாரிகள் சோதித்தனர். அதிகபட்ச கொடுமையாக தலை வாரி பின்னலிட்ட மாணவிகளின் சடைகளையெல்லாம் சோதித்துப் பார்த்தனர். தேர்வு எழுத வந்த மாணவிகள் தலைவிரிக் கோலமாக வரிசையில் நின்றிருந்ததை பெற்றோர்கள் சோகமாக பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தது. இப்படி நீட் தேர்வு என்ற பெயரில் நடைபெறும் அமர்க்களம் இந்த ஆண்டும் தொடர்ந் தது குறிப்பிடத்தக்கது.

;