tamilnadu

img

3 மாணவிகளின் உயிரைப் பறித்த நீட் மாணவர்கள் கொந்தளிப்பு; போராட்டத்திற்கு அழைப்பு

சென்னை, ஜூன் 6 -நீட் தேர்வு முடிவுகள் மீண்டும் தமிழக மாணவர்களை கடுமை யான மன அழுத்தத்திற்கும், கொந்த ளிப்பிற்கும் தள்ளியிருக்கிறது. பெற்றோர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி யிருக்கிறது. அரசியல் இயக்கங்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. இந்த ஆண்டு தமிழ கத்தில் மூன்று மாணவிகளின் உயிரைப் பறித்து, மோடி - எடப்பாடி அலங்கோல ஆட்சிகளின் அராஜக உருவத்தை பளிச்செனக் காட்டியிருக்கிறது.இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜுன் 5 புதனன்று மாலை வெளி யானது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 47 சதவீதம் தேர்ச்சிபெற்றதாக கூறப்பட்ட போதிலும் அதில் நியாயம் பிறக்க வில்லை. தேர்வு முடிவுகளின்படி அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் 43 பேர் சாதியப்படிநிலையில் உயர்ந்த இடங்களில் இருப்பவர்களே ஆவர்.வெறும் 7 பேர் தான் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள். அவர்களிலும் ஒரே ஒருவர்தான் பெண். முதல் 50 இடங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் ஒருவர் கூட இல்லை.நாடு முழுவதும் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 6,31,473 பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 3,75,000 பேர் மட்டுமே. இது 51 சதவீதம் ஆகும். அதே நேரம் இடஒதுக்கீடு அல்லாத பிரிவினரின் தேர்ச்சி 57 சதவீதம் ஆகும்.எனவே ஒட்டுமொத்தத்தில் நீட் தேர்வு என்பது தமிழக மாண வர்களின் மருத்துவக் கல்வி கனவை பறிப்பது மட்டுமல்ல; நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மருத்துவக் கல்வி யிலிருந்து தள்ளி வைப்பதே ஆகும். 

மூன்று மாணவிகள்
இத்தகைய நீட் அட்டூழியத்தால் மருத்துவக் கல்வி கனவு பறிக்கப்பட்ட தமிழக மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ, விழுப்புரம் மோனிஷா, பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகிய மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்த ளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கே. பாலகிருஷ்ணன் பேட்டி
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மூன்று மாணவிகளது மரணம், தற்கொலை என்றாலும் உண்மையில் மத்திய அரசின் தவறான மருத்துவக் கல்விக் கொள்கையால் நடத்தப்பட்டுள்ள படு கொலையே எனக் குறிப்பிட்டார்.“தமிழகத்திற்கு நீட் தேர்வி லிருந்து விதி விலக்கு அளிக்க வேண்டுமென சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டுள்ள இரண்டு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய - மாநில அரசுகள் பெற வேண்டும்” எனவும் அவர் வலி யுறுத்தினார்.

நீட் தேர்வின் அநீதியால் இறந்த மாணவிகள் ரிதுஸ்ரீ, வைஸ்யா, மோனிஷா ஆகிய மூன்று பேரின் மரணத்திற்கு நீதி கேட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச்செயலாளர் வீ.மாரியப்பன் விடுத்துள்ள செய்தி வருமாறு:தமிழகத்தில் நீட் தேர்வு  நடத்துவதன் மூலம் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது. ஆனாலும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு முடிவு வெளியானதையொட்டி ரிதுஸ்ரீ, வைஸ்யா, மோனிசா ஆகிய மூன்று மாணவிகளும் தற்கொலை செய்து இறந்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியாமல் போவது தொடர்கதையாகி வருகிறது. இந்தாண்டு 48.5ரூ தேர்ச்சி பெற்றதாக சொல்லும் அதே வேளையில் 51.4ரூ பேர் தேர்வாகாமல் போனது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். மாநில அரசின் பாடத் திட்டத்தில் படித்து தேர்வான மாணவர்களுக்கு மத்திய பாடத் திட்டத்தில் நீட் தேர்வை நடத்துவது எந்தவகையிலும் நியாயமல்ல என பல அமைப்புகள் கூறியும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இதுவரை 10க்கும் மேற்பட்ட உயிர்களை தமிழகத்தில் மட்டும்  நாம் இழந்துள்ளோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தலையிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இரண்டு தீர்மானங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த கோரிக்கையை முன் வைத்து தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்திட தமிழக மாணவர்களை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

வாலிபர் சங்கம்
இதனிடையே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ரிதுஸ்ரீ, மோனிஷா, வைஸ்யா ஆகிய மூன்று மாணவிகளின் மரணத்திற்கு இரங்கலும், அஞ்சலியும் தெரிவித்துள்ளனர். தற்கொலை ஒரு போதும் தீர்வாகாது என்றும், அநீதிக்கு எதிராக மன உறுதியுடன் போராட மாணவர்கள் முன்வர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ள அவர்கள், நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தியும், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி தமிழக அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

;