tamilnadu

img

சென்னைப் பல்கலை.யில் எம்.பில்., படிப்பை நீக்கக் கூடாது... இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்...

சென்னை:
 சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் படிப்பை நீக்கி அறிவிப்பு வெளி யிட்டுள்ள சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம்  வன்மையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

இந்தியாவின் தொன்மையான பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தின்கீழ் 120 க்கும் மேற்பட்ட கல்லூரி கள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விபயின்று வருகிறார்கள். முதல்தலைமுறை யாக கல்வி பெரும் மாணவர்கள் முதல் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பல ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பல்லாயிரம் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ்பயின்று வருகின்றனர். அம்மாண வர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்யும்ஒரே புகலிடமாக சென்னை பல்கலைக்கழ கம் இயங்கி வருகிறது.இன்றைய நவீன தாராளமயக் கொள்கைகளால் அரசு சார் பணியிடங்கள் கிடைப்பது குதிரை கொம்பாக மாறியுள் ளது.  படிப்பை முடித்து   கற்பித்தல் பிரிவில்ஏதேனும் பங்களிப்பு செலுத்தலாம் என விரும்பும் பல மாணவர்கள் தங்கள் முதுகலைப் பட்டம் முடித்ததும் எம்பில் பட்ட படிப்பை ஒரு வருடத்தில் முடித்து பல கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளராக பணிபுரியும் வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச அந்த வாய்ப்பை பறிக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்ப சூழலால் பெரிதும் பாதிக்கப்படும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அனைவராலும் பிஹெச்டி எனும் முனைவர் பட்டம் படித்திட இயலாது. எனவே பல மாணவர்கள் எம்பில் பட்டம் பெறுவதை விரும்புகிறார்கள். மேலும் முனைவர் பட்ட கல்வி படிப்பதற்கு முன்பு எம்பில் படிப்பது ஆய்வாளருக்கான பல அடிப்படையான அம்சங்களை கற்றுக்கொள்ள உதவுகிறது. புதியக்கல்வி கொள்கையில் எம்ஃபில் போன்ற பல அடிப்படையான பட்டங்களை நீக்கியும் கல்வியை வணிகமயமாக்கி நேரடியாக போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் நடத்தி பணக்கொள்ளை யடிக்கவும், ஏழை,எளிய மாணவர்கள் ஆய்வாளர்களாக உருவாகுவதை தடுக்கும் விதமாகவே பல மோசமான அறிவிப்புகள்  இக் கல்விக்கொள்கையில்  அடங்கியுள்ளது.  சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு மோசமான தேசியக்கல்விக் கொள்கை திட்டத்தை நிறைவேற்றுவதாகவே உள்ளது.தமிழக அரசும் தேசியக் கல்வி கொள்கையை எதிர்த்துள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களின் நலன் கருதி எம்பில் பட்ட படிப்பை தொடர்ந்து நடத்தவேண்டும். தற்போதைய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இப்பிரச்ச னையில் உடனே தலையிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். 

;