tamilnadu

எம்எல்ஏக்களுக்கு பனைவெல்லம்!

சென்னை, ஜூலை 4- தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் துணைக் கேள்வி எழுப்பிய பேர வைத்துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பனைவெல்லம் உடல் நலத்திற்கு நல்லது என்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாதம்தோறும் இரண்டு பனைவெல்லத்தை அமைச்சர் வழங்க முன்வருவாரா? என்றார். இதற்கு பதிலளித்த கதர் கிராமத்  தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், “இது தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.