tamilnadu

img

உள்ளாட்சித்தேர்தலில் பெற்ற வெற்றி தொடரும் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை,ஜன.5 தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சரிசமமாக வெற்றி பெற்றுள்ளோம் என்று அதிமுக பொய் பிரச்சாரம் செய்வதாக மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் தனது தொகுதி பெண்களுக்கு இலவசமாக கணினி தொழில் பயிற்சிகள் அளிக்கும் மையத்தை மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ. வுமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.இந்த பயிற்சி மையத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில், கொளத்தூரில் நீட் தேர்வால் தனது மருத்துவக் கனவை தொலைத்து உயிர் மாய்த்த அனிதாவின் பெயரால் கல்வி மையம்ஒன்றை தொடங்கி மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். முதல்கட்டமாக 67 பேர் பயிற்சி பெற்று வேலைக்கு சென்றுள்ளார் கள். இப்போது 61 பேர் பயிற்சி பெற்று வரு கிறார்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கல்வி மையங்களை தொடங்கி வேலைவாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சரிசம அளவில் வென்றதாக சொல்கி றார்கள். அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் தி.மு.க. தேய்பிறை என்றும் அ.தி.மு.கவை வளர்பிறை என்றும் சொல்கிறார். ஒன்றிய கவுன் சிலர்கள் 2100 பேர் வெற்றி பெற்றி ருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் 1781 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இது சரிசமமா? மாவட்ட பஞ்சாயத் தில் தி.மு.க. 243 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க. 214 இடங்களில் வென்றுள்ளது இது சரிசமமா? அரசியலுக்காக வேண்டு மானால் அமைச்சர்  அப்படி பேசலாம். ஊடகங்கள் தவறாக எழுதலாமா? என்று வினவியுள்ள மு.க.ஸ்டாலின் வரும் காலத்தில் தி.மு.க. இதைவிட மகத்தான வெற்றி பெறும் என்றார்.

;