tamilnadu

img

அமைச்சர் தங்கமணி கொரோனாவிலிருந்து மீண்டார்... 

சென்னை
தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்படும் எம்எல்ஏ-களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3 எம்எல்ஏ-க்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 16 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 அமைச்சர்களும் அடங்கும். 

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்துள்ள நிலையில், ஸ்ரீபெரும்பத்தூர் அதிமுக எம்எல்ஏ பழனி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, செஞ்சி தொகுதி எம்எல்ஏ மஸ்தான், ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு தொகுதி எம்எல்ஏ அரசு ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தொழிலாளர் துறை அமைச்சர் (பெண்) நிலோபர் கபில் உட்பட மற்ற எம்எல்ஏ-க்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி 12 நாட்கள் சிகிச்சைக்கு பின் இன்று (திங்கள்) குணமடைந்து வீடு திரும்பினார். தங்கமணி ஜூலை 8-ஆம் தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குயிர்ப்பிடத்தக்கது.

;