சென்னை, மார்ச் 24- தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் புதிய தாக பால் பண்ணைகள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி பால் வளத் துறைக்கான புதிய திட்டங்களை வெளி யிட்டார். அப்போது, “பால் உற்பத்தி திறன் அடிப்படையின் மூலம் பிறந்த கிடாரிகளின் வம்சாவழி சோதனை திட்டத்தின் மூலம் ரூ. 20.87 கோடியில், 180 உயர்ரக பொலி காளைகள் உற்பத்தி செய்யப்படும்”என்றார். பால் உற்பத்தியாளர்கள் கால்நடை களுக்கு தரமான பசுந்தீவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, 25 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு விவ சாயிகளின் பட்டா நிலங்கள் கண்டறி யப்பட்டு, அதில் பசுந்தீவன புல் பயிரிட மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றி யங்கள் மூலம் 37.50 கோடி ரூபாய் மானி யத்தில் வேளாண் உள்ளீடுகள் வழங்கப் பப்படும். தேனி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருள்கள் தயா ரிக்கும் வசதியுடன் கூடிய புதிய பால் பண்ணை ரூ. 58 கோடியில் நிறுவப்படும். அதிக ரித்து வரும் தயிர், மோர், லஸ்ஸி, பன்னீர் போன்ற பால் உப பொருட்களின் தேவை களை நிறைவு செய்யும் வகையில், திரு வண்ணாமலை, மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூரில் உள்ள பால் பண்ணைகளில் பால் உபபொருள்கள் தயா ரிப்பதற்குத் தேவையான உபகரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.