தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்குகிறது என சுகாதத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஒன்றிய அரசு நடத்துகிறது. தமிழ்நாட்டில் 85% இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதியும், 7.5% இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட்22, 23 ஆம் தேதி நடைபெறுகிறது.