tamilnadu

img

மருதம் பொங்கல் விழா

விழுப்புரம்.ஜன.17- விழுப்புரத்தில் பொங்  கலையொட்டி 13ஆம் ஆண்டு மருதம் கலை விழா   இரு தினங்கள் நடை பெற்றன. தொடக்க நிகழ்ச்சி யில் ஒருங்கிணைப்பாளர்  ஆ.ரவிகார்த்திகேயன் வர வேற்றார். பேராசிரியர் இரா. தமிழரசி தலைமை வகித்தார்.  தஞ்சை வீர சோழன் கலைக் குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி  நடைபெற்றது. சிவ.சிவக் குமார் தலைமை வகித்தார். சி.சித்திரவேல் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் துரை.ரவிக் குமார் எம்.பி. விழாவைத் தொடங்கி வைத்து, ‘கீழடி ஆய்வும் தொன்மைச் சான்று களும்’ என்ற தலைப்பில் உரையாற்றினர்.  தொடர்ந்து  நடைபெற்ற கலை பெரு மிதம் நிகழ்வுக்கு எழுத்தா ளர் ஆர். ராமமூர்த்தி தலைமை வகித்தார். கவிஞர்  மாதவ கிருஷ்ணன் முன்  னிலை வகித்தார். இரண் டாம் உலகப் போரின் கடைசி  குண்டு என்ற திரைப்படத்தின் இயக்குநர் ஆதியன்ஆதிரை வாழ்த்துரை வழங்கினார்.  இரண்டாம் நிகழ்ச்சியில், தெருக்கூத்து நடைபெற்றது. செண்டியம்பாக்கம் க.காத்த வராயன் குழுவினரின் சிவ சக்தி விநாயகர் நாடக சபா சார்பில், மண் மணக்கும் தெருக்கூத்து நிகழ்வு நடை பெற்றது. எழில் இளங்கோ வரவேற்றார். பிரபா. ஆர். தண்டபாணி தலைமை வகித்தார். செங்கல்பட்டு இரா.எல்  லப்பன் சிறப்புரையாற்றி னார். நா.கிரி தலைமை வகித்  தார்.  புதுவை ஜெயமூர்த்தி  குழுவினரின் தமிழிசை நடை பெற்றது. கதை சொல்லி நிகழ்வில் எழுத்தாளர் பவா. செல்லத்துரை சிறப்புரை யாற்றினார். நிறைவாக மருத்துவர்கள் சரவணராஜா, திருமாவளவன், சி.வீர ராகவன், க.காத்தவராயன் உள்ளிட்டோரின் சேவைப் பணியை பாராட்டி மருதம் விருதுகள் வழங்கப்பட்டன. இர.சின்னசாமி நன்றி கூறினார்.

;