tamilnadu

img

சதுப்புநில பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட்

சென்னை, மே 20 -பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சோழிங்கநல்லூர் பகுதி சார்பில் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மே 11 அன்று வேளச்சேரி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டி ஞாயிறன்று (மே 19) நடைபெற்றது.இதில் ஏஎஸ்சிசி அணிகோப்பையை கைப்பற்றியது. அந்த அணிக்கு கோப்பை, 15ஆயிரம் ரூபாய்ரொக்கப் பரிசையும் மாவட்ட துணைச்செயலாளர் சுசீந்திரா வழங்கினார்.இரண்டாம் இடத்தை பிடித்த ஏசிசி அணிக்கு கோப்பையும், 10 ஆயிரம்ரூபாய் ரொக்கப் பரிசையும்தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் வழங்கினார். மூன்றாம் இடம் பிடித்த பிசிசி அணிக்கு கோப்பை மற்றும் 7 ஆயிரம் ரூபாய்ரொக்கப்பரிசை பகுதி தலைவர் சுபாஷ் வழங்கினார்.பகுதிச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் யுவராஜ், காண்டீபன், ராஜாமணி, ரேகா, சரவணன், பகுதி பொருளாளர் திவாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.