tamilnadu

img

ஜி.எஸ்.டி வரியை ஒரே சீரான வரியாக மாற்றிடுக: விக்கிரமராஜா

சென்னை, மே 3-ஜி.எஸ்.டி வரியை 5, 12, 18, 28 விழுக்காடு என்பதை மாற்றி ஒரே சீரான வரியாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 36ஆவது மாநில மாநாடு இந்திய வணிகர் எழுச்சி மாநாடாக சென்னை ராயப் பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தொழில் துறை அதிபர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். வணிகர் வாழ்வினில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக இந்த மாநாடு அமையும்” என்றார்.ஜிஎஸ்டி அமலாக்கத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது எளிய வணிகர்களும் எளிமையாக ஜிஎஸ்டி வரி செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார். ஒருவகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வணிகர்களின் இன்னல் களையும், பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தையும் புரிந்துகொண்டுள்ளனர். பொருளாதாரத்தின் முதுகெலும்பான வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.பிளாஸ்டிக் தடையை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பிளாஸ்டிக் விற்பனையாளர் களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக அதிகாரிகள் சிறு வணிகர்களை மிரட்டுவது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் விக்கிரமராஜா கோரிக்கைவிடுத்தார்.இச்சந்திப்பின் போது மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தரா ஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

;