tamilnadu

சென்னை மற்றும் ராணிப்பேட்டை முக்கிய செய்திகள்

மனிதநேயத்தை வலியுறுத்தும் சிம்பொனி இசை ஆல்பம்

சென்னை, ஜூன் 15- மனித நேயத்தின் மாண்புகளை சித்தரிக்கும் விதமாக ‘ஸ்பிரிட் ஆஃப் ஹ்யுமேனிடி’ சிம்பொனி இசை ஆல்பத்தை. சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர் கணேஷ் பி. குமார் உருவாக்கியுள்ளார். வரும் ஜூன் 26, 2020 அன்று இந்த ஆல்பம் சர்வதேச அளவில் வெளியிடப்பட உள்ளது. இரண்டு படைப்புகள் கொண்ட இந்த சிம்பொனி இசை ஆல்பத்தில், முதல் படைப்பான சிம்பொனி ரைஸ்  உலகின் மாபெரும் இசை மேதை பேதோவன்  தன் வாழ்வின் வீழ்ச்சிகளிலிருந்து எழுச்சி பெற்று உயர் நிலை அடைந்த உண்மையை கருத்தில் கொண்டு, உலகத்தாருக்கு “நிலைகுலைந்தபோது நிமிர்ந்து எழு” என்று நம்பிக்கை ஊட்டும் உள்ளுணர்வின் வெளிப்பாடேயாகும்.  இரண்டாவது படைப்பான சிம்பொனிக் போயம் தி ஜர்னி நமது இந்திய, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது நவாநகர் மகாராஜ் ஜாம் சாஹெப் திக்விஜய் சிங்ஜி  ஆற்றிய மகத்தான மனிதநேயச் செயல்களை வாத்தியங்கள் மற்றும் வாய்ப்பாடல் மூலம் போற்றிப் புகழும் இசைச் சமர்ப்பணமாகும்.  இந்த சிம்பொனி இசை ஆல்பம் வெளிவர இசையமைப்பாளர் கணேஷ் பி. குமாருக்குப் பேருதவியாக இருந்தவர், இந்த இசை ஆல்பத்தின் புரவலர்ஆனந்த் மாதவன் ஆவார்.   ஆனந்த் மாதவனின் கொள்ளுப் பாட்டனார் வி. கிருஷ்ண சாமி ஐயர்தான் மகாகவி பாரதியாரின் பாடல்களை தனது சொந்த செலவில் முதன்முதலாக அச்சிட்டு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கனாவரம் ஊராட்சி பெரிய ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிடுக

ராணிப்பேட்டை, ஜூன் 15- ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா செங்கனாவரம் ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பாசனத்தின் மூலம் சுமார் 25 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. ஏரியை ஒட்டி அமைந்துள்ள 3ஆவது கண் மதகு வழியே செல்லும் கால்வாயை அதே ஊரைச்  சேர்ந்த குமரேசன், கார்த்தி, வின்ன நாக முதலியார் ஆகியோர் ஆக்கிர மித்துள்ளனர்.  பலமுறை அவர்களி டம் ஆக்கிரமிப்பை அகற்ற வலி யுறுத்தியும், அவர்கள் ஆக்கிர மிப்பை அகற்ற மறுத்து விட்டனர். இதையடுத்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, வட்டத் தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் கலவை பொதுப் பணித்துறை (பாச னம்) உதவி பொறியாளரிடம், வருவாய்த் துறை மூலம்  கால்வாயை அளந்து ஆக்கிர மிப்பை அகற்றி பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட பொறி யாளர் உரிய நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்துள்ளார்.

9 வது நாளாக பெட்ரோல் விலை உயர்வு

சென்னை, ஜூன் 15- சென்னையில் 9வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்  பெட்ரோல் விலை 80 ரூபாயை நெருங்கி யுள்ளது. பொதுமுடக்கத்திலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 43 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 96 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 51 காசு கள் அதிகரித்து 72 ரூபாய் 69 காசுகளுக்கு விற்கப்படுகிறது. 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்ட ருக்கு 4 ரூபாய் 42 காசுகளும், டீசல் விலை  லிட்டருக்கு 4 ரூபாய் 47 காசுகளும் அதிக ரித்துள்ளன.

;