tamilnadu

சென்னை மற்றும் அம்பத்தூர் முக்கிய செய்திகள்

2 மாதங்களுக்கு பிறகு சென்னை ரிச்சி தெருவில் கடைகள் திறப்பு

சென்னை, மே 27-   ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் ரிச்சி தெருவிலும் கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்  கப்பட்டுள்ளது. ரிச்சி தெருவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து அண்ணா சாலை பகுதி மீண்டும் பரபரப்பாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. சென்னை அண்ணா சாலையை ஒட்டி யுள்ள ரிச்சி தெருவில் ஏராளமான எலக்ட்  ரானிக் கடைகளும், செல்போன் கடைகளும்  செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து சென்னையில் இரண்டா வது பெரிய எலக்ட்ரானிக் மார்க்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மலிவு விலையில் பொருட்கள் கிடைப்பதால் எப்போதும் கூட்டம் அலைமோதும். கொரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக ரிச்சி தெருவில் உள்ள கடை களும் மூடிக்கிடந்தன. 1500-க்கும் மேற்பட்ட கடைகள் ஒரே நேரத்தில் மூடப்பட்டதால் வியாபாரிகள் வருவாய் இழந்து தவித்தனர். இதனால் ரிச்சி தெரு இருக்கும் பகுதி பர பரப்பின்றி காணப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் ரிச்சி தெரு விலும் கடைகளை திறப்பதற்கு அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும், சமூக இடை வெளியை பின்பற்றுவதற்கு வசதியாகவும் சுழற்சி முறையை பின்பற்ற கடை உரிமை யாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 1, 3, 5, 7, போன்ற ஒற்றை இலக்க எண்களு டன் கூடிய கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். 2, 4, 6 போன்ற இரட்டை வரிசை கொண்ட கடை களை செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் திறக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

,அம்பத்தூர் அருகே நகை கொள்ளை

அம்பத்தூர், மே 27- அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள அத்திப்பட்டு மேட்டுத் தெரு  10ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவர் உஷா. இவரது மகன் பிரகாஷ். இவர் லாரி ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு அனைவரும் குடும்பத்துடன் மாடியில் படுத்து தூங்கி யுள்ளனர். புதனன்று காலை எழுந்து வந்த போது வீடு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பிரகாஷ் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் அமல்ப டுத்தப்பட்டுள்ள நிலையில் லாரி ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழலில் இக்கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்  தக்கது.

கொரோனா நோயாளி தற்கொலை 

சென்னை, மே 27 - சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து  கொண்டார் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  57 வயதான நோயாளி ஒருவர் புதனன்று (மே 27) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செவ்வாயன்று (மே 26)ஒருவர் தற்கொலை கொண்ட நிலையில், மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சக உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் உதயம்

சென்னை, மே 27 - சென்னையில் அச்சகத் தொழிலில் ஈடு பட்டுள்ளவர்களுக்காக புதிய சங்கம் உதய மாகி உள்ளது. இந்த சங்க அமைப்புக்கூட்டம் மே 26 அன்று  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிஐடியு  மாநிலக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு  மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவரு மான தி.ஜெய்சங்கர், சே பிரிண்டர்ஸ் கே. மணிகண்டன், ஐஎன்டி பிரிண்டர்ஸ் சையத்  கோயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சங்கத்தின் பெயர்  ‘சென்னை அச்சக உரிமையாளர் மற்றும்  தொழிலாளர்கள் சங்கம்’ - சிஐடியு என்றும்,  ஒருங்கிணைப்பாளராக தி.ஜெய்சங்கர்  செயல்படுவதென்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

சலவைத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி  முதல்வருக்கு மனு

சென்னை, மே 27 - சலவைத் தொழிலாளர்க ளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி, தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆ.பெரியசாமி முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் முதல் ஊரடங்க அமலில் இருப்பதால் சலவைத் செய்பவர்கள் வேலை இன்றி சிரமப்படுகின்றனர். தமிழகத்தில் சுமார் 30 லட்சம் சலவைத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நலவாரி யத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். தமிழக அரசு மற்ற நல வாரியங்களுக்கு அறிவித்து போல், நலவாரியத்தில் பதிவு செய்த சலவைத் தொழிலாளர்கள், பதிவு செய்து புதுப்பித்து இயலாத வர்களுக்கும் 2ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.

காலமானார்

சென்னை, மே 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லி வாக்கம் பகுதிகுழு உறுப்பினர் ஆர்.ராமு- வின் தந்தை பி. ராதாகிருஷ்ணன் புதனன்று  (மே 27) காலமானர். அவருக்கு வயது 72.  அன்னாரது உடலுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா,  செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, எஸ்.கே.முருகேஷ், பகுதிச் செயலாளர் எம்.ஆர். மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் மணிமேகலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் வேளங்காடு சுடுகாட் டில் தகனம் செய்யப்பட்டது.