tamilnadu

சென்னை,கடலூர்,திருவள்ளூர் முக்கிய செய்திகள்

காலமானார்
சென்னை, ஜூலை 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதி முன்னாள்  செயலாளர் டில்லி பாபுவின் தந்தை விநாயகம் செவ்வாயன்று (ஜூலை 7) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. கொரோனா தொற்றுடன் ஐசிஎப் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது  உடல் புதனன்று (ஜூலை 8) வேலாங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்  பட்டது. அன்னாரது இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட  செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  வடசென்னை மாவட்டத் தலைவர் கார்தீஷ்குமார், செயலாளர் சரவணத்  தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச்  செயலாளர் ஜி.செல்வா, டில்லிபாபுவை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.

நுண்கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை
கடலூர், ஜூலை 8- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் வட்டி மற்றும் தவணைத் தொகையை செலுத்த நெருக்கடி கொடுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகர் சாகமூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நுண்நிதிக் கடன் நிறு வனங்கள் கட்டாயமாக கடன் மற்றும் தவணைத் தொகை வசூலிப்பது  தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்  பாக விரைவில் அந்த நிறுவனங்கள் மற்றும் வங்கித் துறையினருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

கடலூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா
கடலூர், ஜூலை 8- கடலூரில் பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் 8 ஒப்பந்தத்  தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைக் கண்டித்தும்,  பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரியும் பொது மேலாளர் அலுவலகத்தை பிஎஸ்என்எல் ஊழியர்கள் முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் குழந்தைநாதன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சம்பந்தம் முன்னிலை வகித்தார். ஊழியர் சங்க நிர்வாகிகள் விஜய் ஆனந்த், குருபிரசாத், ஆனந்தன்  மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தகவலறிந்த துணை பொது மேலாளர் மதுரை ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது  என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் போராட்டத்தைக்  கைவிட்டு கலைந்து சென்றனர்.

நிர்வாகத்தின் அலட்சியத்தால் 26 தொழிலாளர்களுக்கு தொற்று
திருவள்ளூர், ஜூலை 8- இந்தியன் ஆயில் கார்பரேசன் நிர்வாகத்தின் அலட்சியத்தால் 26-ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் இங்கு பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவருக்கு தொற்று  உறுதியானது. இதனையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முகக் கவசம், தனிமனித இடைவெளி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வா கம் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து சிஐடியு மாவட்டத் தலைவர்  கே.விஜயன் நிர்வாகததிற்கு தொடர்ந்து கடிதம் எழுதியும், விடுப்பு இன்றி  தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்துள்ளனர். இந்நிலையில் நடைபெற்ற பரிசோதனையில் 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

;