tamilnadu

எல்.டி.சாமிக்கண்ணு நினைவு நாள்...

லூயிஸ் டொமினிக் சாமிக்கண்ணு ஒரு இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர் மற்றும் வானியலாளர்.

இவர் சென்னை மாகாணத்தில் ஒரு ஏழை கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர்.எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர் பதவியில் பிப்ரவரி 1925  முதல் செப்டம்பர் 10, 1925 வரை பணியாற்றினார்.பதவியில் இருக்கும் போதே மரணமடைந்தார்.

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அவைத்தலைவர் அவரே. அவைத்தலைவராக இருந்த போது சட்டமன்ற நூலகத்தை உருவாக்கினார். திவான் பகதூர் பட்டம் பெற்ற இவர், 1924ல் பிரிட்டனின் இந்தியப் பேரரசு அமைப்புப் பட்டியலில் (Order of the Indian Empire) இடம் பெற்றார்.

===பெரணமல்லூர் சேகரன்====

;