tamilnadu

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம்.ஏப்.29-உள்ளாட்சித் தேர்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 4,690 வாக்குச்சாவடிகளும். நகர்புற பகுதிகளில் 500 வாக்குச்சாவடிகளும் மொத்தம் 5190 வாக்குச் சாவடிகள் அடங்கிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது,வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்தல் தொடர்பாக மக்களவை உறுப்பினர். சட்டமன்ற உறுப்பினர். அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் க.பொன்முடி.  தா.உதயசூரியன் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை யும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “வாக்குச்சாவடிகள் மாற் றம் செய்வது தொடர்பான கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் வரும் மே மாதம் 2 ஆம் தேதிக்குள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ). நகராட்சி ஆணையாளர்கள். பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் எழுத்து மூலம் தெரிவிக்கலாம். வாக்குச் சாவடிகளின் இறுதிப்பட்டியல் வரும் 4 ஆம் தேதி வெளியிடப்படும்” என்றார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) ம,கண் ணன். (வளர்ச்சி) ஆர்,மஞ்சுளா. விழுப்புரம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆர்.ஜோதி, கள்ளக்குறிச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆர்.ரெத்தினமாலா மற்றும் நகராட்சி ஆணையா ளர்கள். பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;