tamilnadu

img

தனித்திருந்தே உரிமைக்கு குரல் எழுப்புவோம்...

பிரதமரின் இன்றைய உரை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது. பிரதமர் ஏற்கனவே கையை தட்டச் சொன்னார், இப்போது விளக்கை அணைக்க சொல்கிறார், நாளை என்ன சொல்வாரோ? அவருக்கே வெளிச்சம்!

\கோடானு கோடி இந்திய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தங்களது எதிர்காலம் தொலைந்துவிட்ட அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் மக்களைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு மத்திய மாநில அரசுகளிடம் உள்ளது. மாநில அரசுகளோ மத்திய அரசின் நிதி உள்ளிட்ட உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் கையறு நிலையில் உள்ளன.அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு பிரதமரின் உரை ஏமாற்றம் அளிப்பது மட்டுமல்ல நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது.

ஒருபுறம் கொரோனா வைரசின் அச்சுறுத்தல், மறுபுறம் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள். இவ்விரு கொடுமைகளிலிருந்தும் மக்களை காப்பாற்ற தம்மிடம் எதுவுமில்லை என்பதை பிரதமர் சொல்லாமல் சொல்லிவிட்டார்.மத்திய அரசு எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக பொறுப்புள்ள அரசியல் கட்சிகளும் அறிவியல் அமைப்புகளும் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றன. அவற்றைப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதே பிரதமரின் தலையாயக் கடமை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

- கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்
 

;