tamilnadu

img

அறிஞர் ஆனந்த் டெல்டும்டே மீதான பொய்வழக்கை கைவிட வேண்டும்.... மத்திய அரசுக்கு பல்வேறு இயக்கங்கள் வலியுறுத்தல்

சென்னை:
புரட்சியாளர் அம்பேத்கரின் உறவினரும், உலகறிந்த சிந்தனையாளருமான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவை பொய்வழக்குப் புனைந்து சிறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்பரல் 14 அன்று அவர் சிறை அதிகாரிகள் முன் சரணடைய ஙளண்டுமென  உச்சநீதிமன்றம்  அறிவுறுத்தியுள்ளது. அரசு அதிகாரிகளின் பிடிவாதமான வற்புறுத்தல்களின்  அடிப்படையில்தான் ,  கொரோனா தொற்றின் தீவிரம் தெரிந்தும், அம்பேத்கர் பிறந்தநாளின் முக்கியத்துவம் தெரிந்தும்  அதிகாரிகள் நீதிமன்றத்தில் கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவே நீதிமன்றமும் அவரைக் கைது செய்யும்வகையில் ஆணையிட்டுள்ளது. இது அவர்மீதான பழிவாங்கல் மட்டுமின்றி புரட்சியாளர்அம்பேத்கருக்கு செய்யும் அவமரியாதை என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் சாடியுள்ளன.

இந்நிலையில், மத்திய அரசு அவருக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுத்து அவர் சிறைக்குச் செல்லாமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக விசாரணைக் கைதிகளையெல்லாம் விடுவிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் எந்த குற்றமும் செய்யாமல், குற்றம் செய்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லாத ஒரு பொய் வழக்கில் அறிஞர் ஆனந்த் டெல்டும்டே அவர்களைக்  கைது செய்வது  ஏற்புடையது அல்ல. அவர் மீதான பொய் வழக்குகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

;