tamilnadu

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 31 கடைசி

வேலூர், மே 17-வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 31 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர், திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகளும், திண்டிவனத்தில் ஒரு தனியார் சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு பிஏஎல்எல்பி சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த விண்ணப்பத்துக்கான கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை வங்கிக் கணக்கில் கட்டணமாகச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகத்தை முதல்வர் சாந்தி தொடங்கி வைத்தார். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 31-ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டது.