tamilnadu

லட்சுமி விலாஸ் வங்கி விளக்கம்

சென்னை,மார்ச் 16-  “லட்சுமி விலாஸ் வங்கி”தொடர்பாக சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள்  தவறானவை மற்றும் அவற்றில் உண்மையில்லை என்று அவ்வங்கி தெளிவுபடுத்தியுள்ளது வங்கியின்  லிக்விடிட்டி கவரேஜ் விகிதம் ஒழுங்குமுறை அமைப்பு பரிந்துரைத்த அளவை விட  ஒப்பீட்டளவில்  அதிகமாக உள்ளது மற்றும்  வாராக் கடன்களைமீட்டெடுக்கும் பணியில் இருக்கிறோம். இதனால் வாராக் கடன் அளவு கடந்த காலாண்டில் (டிசம்பர் 2019) ஓரளவு குறைந்துள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி பாதுகாப்பாக உள்ளது. ஆதாரமற்ற பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் எந்தவொரு சந்தை வதந்திகளையும் புறக்கணிக்குமாறு  வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்வதாக அவ்வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. நடைமுறையிலிருக்கும் விதிமுறைகளின்படி எங்கள் மூலதனம் திரட்டும் திட்டங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.