தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்- ‘சிந்தனை சிற்பி’ தோழர் சிங்காரவேலரின் 78-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா. முரளி, வெ. தனலட்சுமி, வே. ஆறுமுகம், துறைமுகம் பகுதி செயலாளர் ஜலால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.