குதிராம் ஆறு வயதானபோது அவரது பெற்றோரான திரிலோக்ய நாத்தையும், லட்சுமிபிரியாவையும் இழந்து, அவரது தமக்கை அபரூபா தேவியிடம் வளர்ந்தார்.
1902இல் காலனிய எதேச்சதிகாரத்தை ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகள் மூலம் அகற்ற உறுதி பூண்டிருந்த யுகாந்தார் இயக்கத்தில் இணைந்தார் குதிராம். 1905இல் பள்ளியில் படித்துக் கொண்டி ருந்தபோதே வங்கப் பிரிவினைக்கு எதிரான இயக்கத்தில் குதிராம் தீவிரப் பங்கேற்றார்.
1906இல் குதிராம் மிட்னாப்பூர் சிறை மைதானத்தில் சத்யன் போஸ் எழுதிய ‘சோனார் பெங்கால்’ என்ற புரட்சிப் பிரசுரத்தை வினியோகித்துக் கொண்டி ருந்தபோது கைது செய்யப்பட்டார். அந்தப்பிரசுரம் அவரது ஆசிரியர்களில் ஒருவரான ஆஜன ராம்சரண் பாபுவுக்கு ராஜத்துரோகமாகத் தோன்றியதால் அவர் போலீசுக்குத் தகவல் கொடுத்துவிட்டார்.
போலீசார் குதிராமைக் கைது செய்தனர். ஆனால் அவரோ அவர்களைத் தாக்கிவிட்டு தப்பிவிட்டார். 1906, மே 16 அன்று மேலும் ஒரு ராஜத் துரோக குற்றத்துக்காக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது இளம் வயதைக் கணக்கில் கொண்டு விரைவில் விடுவிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு 1907ல் அவர் ஹட்காச்சியாவில் தபால் பை கொள்ளையில் பங்கேற்றார். 1907இல் டிசம்பர் 6, வங்காள கவர்னர்ஆண்ட்ரூ பிரேசர் சிறப்பு ரயிலில் வந்து கொண்டி ருந்தபோது அவர்மீது குண்டு வீச்சு நடத்தியதில் பங்கேற்றார். அவர் இரு ஆங்கிலேயர்கள் வாட்ஸன் மற்றும் பாம்பில்ட் புல்லர் ஆகியோரின் கொலை முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.
கல்கத்தாவின் தலைமை நீதிபதி கிங்ஸ்போர்டு காட்டுமிராண்டித்தனமான தீர்ப்புகளுக்குப் பெயர் போனவர். எனவே யுகாந்தர் அமைப்பு நீதிபதி கிங்ஸ்போர்டு க்கு மரணதண்டனை விதித்து அதை நிறைவேற்றும் பொறுப்பை குதிராம் மற்றும் பிரபுல்லாசம்கியிடம் ஒப்படைத் தது. கிங்ஸ்போர்டு அச்சமயம் பாது காப்பு காரணங்களுக்காக மாறுதல் செய்யப்பட்டார்.
ஏப்ரல் 13, 1908 அன்று மாலை இருளில் பிரபுல்லாவும், குதிராமும் ஐரோப்பிய கிளப்புக்கு சென்று கொண்டிருந்த கிங்ஸ்போர்டின் இரட்டை குதிரை வண்டி யின்மீது குண்டு வீசினர். ஆனால் அதில் பயணம் செய்தது இந்த நீதிபதியல்ல; ஒரு ஐரோப்பியப் பெண்ணும் அவரது மகளுமாவர். அவர்களிருவரும் தவறாகக் கொல்லப்பட்டனர்.
போலீஸ் விரட்டியதில் பிரபுல்லா சம்கி தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். குதிராம் வெய்னி ரயில்வே ஸ்டேசனில் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டு மரணமடைந்தார்.
1908 ஆகஸ்ட் 11 அன்று பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களால் தூக்கிலிடப்பட்ட குதிராம்போஸ் குறித்து மறுநாள் வெளி யான அமிர்தபஜார் பத்திரிகை தனது தலை யங்கத்தில் “குதிராமின் மரணம்: உற்சா கமாகவும் புன்முறுவல்பூத்துக் கொண்டும் மரணத்தைத் தழுவினார்: அமைதியான இறுதிச் சடங்கு” என கொட்டை எழுத்துக்க ளில் வெளியிட்டது.
பெரணமல்லூர் சேகரன்
ஆகஸ்ட் 11:குதிராம் போஸ் நினைவு நாள்